உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துபாய் படப்பிடிப்பை கைவிட்டு மும்பையிலேயே பாடல் படப்பிடிப்பை நடத்தும் அக்ஷய் குமார் படக்குழு

துபாய் படப்பிடிப்பை கைவிட்டு மும்பையிலேயே பாடல் படப்பிடிப்பை நடத்தும் அக்ஷய் குமார் படக்குழு


கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஈரான், இஸ்ரேல், அமெரிக்க போர் காரணமாக வளைகுடா நாடுகளில் பதட்டம் நிலவி வருகிறது. சாதாரணமான பயணங்கள் மேற்கொள்வதற்கே சிரமங்கள் இருக்கும் நிலையில் அங்கே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருந்த ஷாருக்கான் நடிக்கும் 'கிங்' படக்குழுவினர் அந்தத் திட்டத்தை கைவிட்டுள்ளனர். அதேபோல அக்ஷய் குமார் நடிப்பில் அஹமது கான் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெல்கம் டு தி ஜங்கிள்' என்கிற படத்தில் மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் இடம்பெறுகின்ற ஒரு பாடல் காட்சியை துபாயில் படமாக்க திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக நிலைமை சரியாகிவிடும் என காத்திருந்த படக்குழுவினர், தற்போது துபாய் செல்லும் எண்ணத்தை கைவிட்டு மும்பையிலேயே ஸ்டுடியோவில் துபாய் போன்று மிகப்பிரமாண்டமாக செட் அமைத்து அந்த பாடல் காட்சியை படமாக்க முடிவு செய்துள்ளார்களாம். இந்த பாடல் காட்சியில் அக்ஷய் குமாருடன் இணைந்து சுனில் ஷெட்டி, ரவீணா டாண்டன், ஜாக்கி ஷெராப், லாரா தத்தா, திஷா பதானி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து பங்கேற்பதால் அவர்களை மீண்டும் துபாய் பயணத்திற்காக ஒன்றிணைப்பது சிரமம் என்பதால் மும்பையிலேயே இந்த பாடல் காட்சியை படமாக்க முடிவு செய்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !