உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 32 ஆண்டுக்கு பின் அந்த கூட்டணி: தம்பிக்காக இசையமைக்கிறார் இளையராஜா

32 ஆண்டுக்கு பின் அந்த கூட்டணி: தம்பிக்காக இசையமைக்கிறார் இளையராஜா


இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகரான கங்கை அமரன் 'லெனின் பாண்டியன்' என்ற படத்தில் கதைநாயனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரோஜா வருகிறார். சிவாஜிகணேசன் பேரன் தர்ஷன் இளம் ஹீரோ. சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. கோடையில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இசையமைக்கிறார் இளையராஜா.

இதற்கு முன்பு சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்த 'மூன்றாம்பிறை, தங்கமகன், காக்கி, பகல்நிலவு, காதல்பரிசு, கிழக்குவாசல், பணக்காரன், இதயம், ஆனஸ்ட்ராஜ்' உட்பட 20க்கும் அதிகமான படங்களுக்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இதில் பெரும்பாலான படங்களில் பாடல்கள் சூப்பர்ஹிட். 32 ஆண்டுகளுக்குபின் மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ்க்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை டி.பாலசந்திரன் இயக்கி உள்ளார். தனது தம்பி காட்சிகளுக்கு பின்னணி இசை அமைக்கும்போது, அவருக்கு பாடல்கள் உருவாக்கும்போது இளையராஜா என்ன கமென்ட் அடித்தார் என்பது தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !