உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசன் படத்தில் போலீஸ் வேடத்தில் விஜய் சேதுபதி

அரசன் படத்தில் போலீஸ் வேடத்தில் விஜய் சேதுபதி

தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் 'அரசன்' படம் உருவாகி வருகிறது. இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். வட சென்னை காலகட்டத்தில் இதன் கதைக்களம் நடைபெறுவதால் வட சென்னை படத்தில் இடம்பெற்ற முக்கியமான கதாபாத்திரங்கள் இந்த படத்திலும் இடம் பெறுகின்றனர். மேலும் விக்ராந்த், டிஜே அருணாசலம், யோகலஷ்மி, மாஸ்டர் கமலேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தரமணி பகுதியில் அரங்கம் அமைத்து நடைபெற்று வருகிறது. இதில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பை மே அல்லது ஜூன் மாதத்திற்குள் முடித்து இவ்வருட அக்டோபர் அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !