உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்பும் மோனா சிங்

எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்பும் மோனா சிங்


இந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான 'ஹேப்பி படேல், பார்டர் 2, சுபேதார்' படங்களில் நாயகியாக நடித்த மோனா சிங், ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அடுத்து அவர் நடித்திருக்கும் 'மா கா சம்' எனும் வெப் தொடர் நாளை (ஏப்.,3) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சியில் மோனா சிங் பேசியதாவது:

'ஹேப்பி படேல், பார்டர் 2, சுபேதார்' என அடுத்தடுத்து எனது படங்கள் வெளியாகின. அந்த வகையில் இது எனக்கு ஒரு அற்புதமான ஆண்டாக அமைந்தது. அவை அனைத்திலும் எனது நடிப்பை ரசிகர்கள் பாராட்டினர். நான் மட்டுமல்ல என்னை சுற்றியுள்ளவர்களும் இதனை தனது தனிப்பட்ட வெற்றியாக கருதி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

பொதுவாக நான் அனைவரின் பேச்சையும் கேட்பேன், கடைசியில் மனதில் தோன்றியபடி செயல்படுவேன். இரவில் தூக்கம் வரும்வரை, திரைக்கதைகள் பற்றியும், எனது கதாபாத்திரம் பற்றியும் யோசித்துக்கொண்டிருப்பேன். சவாலான கதாபாத்திரமாக தோன்றினால் உடனடியாக அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வேன். எப்போதும் வித்தியாசமான ஒன்றை செய்ய விரும்புகிறேன்.

எப்போதும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்காமல், எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்புகிறேன். அந்த வகையில் இப்போது இதுவரை நான் நடித்திராத எதிர்மறையான தோற்றத்தில் நடித்துள்ளேன். எனக்கு எப்போதும் வாய்ப்புகள் வந்துக்கொண்டேதான் இருந்தது. ஆனால், சிறிய இடைவெளி எடுக்க முடிவு செய்தேன். வாழ்க்கை என்பது வாழ்வதும் பயணம் செய்வதும்தானே.. அதனால் அந்த இடைவெளியில் பெற்றோருடனும், வெளிநாட்டில் வசிக்கும் என் சகோதரியுடனும் நேரத்தை நேரத்தை செலவிட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !