உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேரளாவில் எஸ்பிபியின் உருவச்சிலை மற்றும் நினைவு பூங்கா திறப்பு

கேரளாவில் எஸ்பிபியின் உருவச்சிலை மற்றும் நினைவு பூங்கா திறப்பு


தென்னிந்தியாவின் இசை ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கடந்த 2020ம் வருடம் கொரோனா காலகட்டத்தில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இது இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவில் அவர் பாடல்களை நேசித்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனாலும் இப்போதும் தனது பாடல்கள் மூலம் அவர் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள சமம் என்கிற அமைப்பு பாலக்காட்டில் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உருவச்சிலை மற்றும் எஸ்பிபி நினைவு பூங்காவையும் உருவாக்கி இருக்கின்றனர். இதன் திறப்பு விழா நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் பிரபல இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி (மரகதமணி) கலந்து கொண்டு எஸ்பிபி யின் உருவ சிலையை திறந்து வைத்தார்.. பின்னணி பாடகர்கள் சித்ரா மற்றும் ஹரிஹரன் ஆகியோர் எஸ்பிபி நினைவு பூங்காவை திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் எஸ்.பி.பி சரண் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் பின்னணி பாடகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழா ஏற்பாடுகளை பாடகர் விஜய் யேசுதாஸ் முன்னின்று ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !