ஹிந்திப் படங்களின் வசூலில் நம்பர் 1 இடத்தில் 'துரந்தர் 2'
ஹிந்தித் திரைப்படங்களின் வசூலில் இந்தியாவில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையை கடந்த வருடம் வெளியான 'துரந்தர்' படத்தின் முதல் பாகம் பெற்றிருந்தது. அந்த சாதனையை தற்போது 'துரந்தர் 2' படம் முறியடித்துள்ளது.
பாக்ஸ் ஆபீஸ் தகவல்படி கடந்த வருடம் வெளியான 'துரந்தர் 1' படம் இந்தியாவில் மட்டும் நிகர வசூலாக 850 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது. 'துரந்தர் 2' படம் தற்போது அந்த சாதனையை முறியடித்து 900 கோடி வசூலைக் கடந்திருக்கிறது என்கிறார்கள். மொத்த வசூலாக இந்தியாவில் 1100 கோடியைக் கடந்துள்ளது.
உலக அளவிலான வசூலில் 'துரந்தர் 2' படம் 1450 கோடியைக் கடந்து 4வது இடத்தில் உள்ளது. 'துரந்தர் 1' படம் சுமார் 1300 கோடியைக் கடந்து 5வது இடத்தில் இருக்கிறது.
அமெரிக்கா வசூலைப் பொறுத்தவரையில் 'துரந்தர் 2', 23 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து, அதிக வசூலைக் குவித்த இந்தியப் படமான 'பாகுபலி 2' சாதனையை முறியடித்துள்ளது.
மொத்த வசூலில் 'டங்கல், பாகுபலி 2, புஷ்பா 2' ஆகிய படங்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. 'புஷ்பா 2' சாதனையை முறியடிக்க இன்னும் 300 கோடி வசூலை 'துரந்தர் 2' பெற வேண்டும்.