விரைவில் 'சார்பட்டா பரம்பரை 2' படப்பிடிப்பு ; நடிகர் முத்துக்குமார் கொடுத்த அப்டேட்
கடந்த 2021ல் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் வெளியானது. வடசென்னை பகுதியில் குத்துச்சண்டையை மையமாக வைத்து 80, 90களின் காலகட்டத்தில் கதை நடப்பதாக உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் வில்லன்களாக குத்துச்சண்டை வீரர்களாக நடித்த பலரும் பிரபலமானார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட இயக்குனர் ரஞ்சித் தரப்பிலிருந்து தகவல் வெளியானது.
இந்த நிலையில் முதல் பாகத்தில் நடித்த நடிகர் 'பேட்ட' முத்துக்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. அது சீக்குவலா அல்லது பிரீக்குவலா என்பதையெல்லாம் பற்றி எனக்குத் தெரியாது. அனேகமாக ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்கலாம். பா ரஞ்சித் என்னை அழைத்தால் படப்பிடிப்பிற்காக நான் தயாராக காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.