கதையின் நாயகனாக பாலாஜி சக்திவேல்
ADDED : 2 days ago
திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், 'ஆப் தி ரெக்கார்ட்' என்ற பைலட் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். ஏ.ஆர். முத்துராமன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம் காவல்துறை அதிகாரி மற்றும் ஒரு சாதாரண மனிதர் இடையே உருவாகும் உணர்வுப்பூர்வமான மோதல், பதட்டம் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளை மையமாகக் கொண்டுள்ளது.
12 நிமிடங்களைக் கொண்ட இந்த பைலட் திரைப்படம் யதார்த்தமும் உணர்ச்சிப்பூர்வமான அனுபவத்தையும் பார்வையாளர்களுக்கு தர இருக்கிறது. பாலாஜி சக்திவேலுடன், ருக்மணி, கொட்டாச்சி, ஆறு பாலா, பிரதீப் மற்றும் மீசை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபாகரன் ஒளி பதிவு செய்துள்ளார். நரேந்தர் இசையமைத்துள்ளார்.
விரைவில் இந்த படம் முழு நீள திரைப்படம் ஆகிறது. அதிலும் பாலாஜி சக்திவேல் நாயகனாக நடிக்கிறார்.