உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: கார்த்திக்கிற்கு 2வது திருமணம் செய்து வைத்த கேயார்

பிளாஷ்பேக்: கார்த்திக்கிற்கு 2வது திருமணம் செய்து வைத்த கேயார்


1989ம் ஆண்டு சோலைக்குயில்'' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் கார்த்திக். படப்பிடிப்பு ஊட்டியில் நடக்கும்போது கார்த்திக்கும், கதாநாயகி ராகினியும் காதலித்தனர். ரகசியமாக திருமணமும் செய்து கொண்டனர். ஆனால், அதை பகிரங்கமாக அறிவிக்காமல் இருந்தனர். படம் முடிந்ததும், இருவரும் சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர். இதை அறிந்த தயாரிப்பாளர் கேயார், கார்த்தியை சந்தித்து ஒரு பெரிய ஹீரோ இது போல் செய்வது முறையல்ல. அதனால் நீங்கள் முறைப்படி திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார். அதற்கு கார்த்திக் ராகினி மலைவாழ் சமூகத்தை சேர்ந்தவள், அவளை மருமகளாக என் குடும்பம் ஒப்புக் கொள்ளுமா என்பது சந்தேகமாக இருக்கிறது என்று தனது பயத்தை வெளிப்படுத்தினார்.

இருந்தாலும் கேயார், கார்த்திக் - ராகினிக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்து பின்பு அதனை பத்திரிக்கையாளர்களுக்கு அறிவித்தார், படம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் திருமண தகவலை தாமதமாக சொல்வதாக அதற்கு காரணமும் சொன்னார்.

படத்தின் இறுதிக் காட்சியாக கார்த்திக்- ராகினியின் நிஜத் திருமண காட்சிகளும், திருமண வரவேற்பு காட்சிகளும் சேர்க்கப்பட்டது. படம் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Senthoora, Sydney
2026-06-02 07:58:21

இவர்கள் திருமணத்தை கேட்டு, முன்னாள் நடிகை தற்கொலைக்கு முயச்சித்தத்தை சொல்லவில்லையே.