முதல் வார இறுதியில் 20 கோடி வசூலித்த 'பிளாஸ்ட்'
அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில், அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் மே 28ம் தேதி வெளியான படம் 'பிளாஸ்ட்'. இப்படத்திற்கு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அது படத்தை நன்றாகவே பிக்அப் செய்ய வைத்தது.
முதல் நாளில் மிகவும் டல்லாக இருந்த வசூல், நேற்றைய நான்காவது நாளில் முதல் நாளை விட சிறப்பாக அமைந்தது. முதல் வார இறுதியின் முடிவில் இப்படம் சுமார் 20 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தைத் தவிர மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் இப்படத்தின் வசூல் குறிப்பிடும்படியாக உள்ளது என்கிறார்கள்.
சுமார் 15 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானதாக தகவல். கோடை விடுமுறை முடிய இன்னும் சில நாட்கள் இருப்பதால் இந்த வாரமும் இப்படத்தின் வசூல் நன்றாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இந்தப் படம் விரைவில் லாபப் பட்டியலில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.