உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குதிரை ரேஸ் பின்னணியில் உருவாகும் படம்

குதிரை ரேஸ் பின்னணியில் உருவாகும் படம்


ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய படம் தொடங்கியது. ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் எச்.வினோத்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஹர்ஷவரதன், இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படம் குறித்து அவர் கூறும் போது 1970களின் தொடக்க காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், குதிரைப் பந்தய உலகை மையமாகக் கொண்டு நேர்மையும் உயர்ந்த லட்சியங்களும் கொண்ட ஒரு இளைஞனின் போராட்டம், கனவுகள் மற்றும் வெற்றிப் பயணத்தை சுவாரஸ்யமாகச் சொல்லும் கதையாக உருவாகவுள்ளது.

1970களின் சென்னையை திரையில் உயிர்ப்பிக்க முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறை, கலாசாரம் மற்றும் நகரின் தனித்துவமான சூழலை மிக நுணுக்கமாக திரையில் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளோம். இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !