உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிலத்தை அபகரிக்க முயற்சி ; சோனாலி பிந்த்ரே கணவர் மீது விவசாயி வழக்கு

நிலத்தை அபகரிக்க முயற்சி ; சோனாலி பிந்த்ரே கணவர் மீது விவசாயி வழக்கு


பாலிவுட் நடிகையான சோனாலி பிந்த்ரே தமிழில் 'காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2002ல் கோல்டி பேல் என்கிற திரைப்பட இயக்குனரை திருமணம் செய்துகொண்ட பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். கடந்த 20 வருடங்களில் இரண்டு மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்த நிலையில் சோனாலி பிந்த்ரேயின் கணவர் தனது நிலத்தை அபகரிப்பு செய்திருப்பதாக புனேவை சேர்ந்த விவசாயி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

“32 ஆயிரம் சதுர அடி பரப்பளவு உள்ள தனது நிலத்தை சோனாலி பிந்த்ரே மற்றும் அவரது கணவர் இருவரும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு ஆட்களையும் இயந்திரங்களையும் அழைத்துக் கொண்டு வந்து கட்டுமானங்களை மேற்கொள்ள துவங்கினார்கள். அதை தடுக்கச் சென்ற என்னையும் என் தாயையும் உள்ளூர் போலீசார் துணையுடன் மிரட்டினார்கள்” என்று கூறி வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த வழக்கு வரும் ஏப்ரல் 24ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதே சமயம் நடிகை சோனாலி பிந்த்ரே இதுபற்றி கூறும்போது, “இது எந்தவித ஆதாரமும் இல்லாத வழக்கு.. எங்கள் மீது தேவையில்லாத கெட்ட பெயரை உருவாக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள். என் பெயரில் எந்த இடமும் அப்படி இல்லை. எங்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இப்படி ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !