உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யஷ் - பஸ் டிரைவரின் மகன் டூ பான் இந்தியா படங்களின் தயாரிப்பாளர்

யஷ் - பஸ் டிரைவரின் மகன் டூ பான் இந்தியா படங்களின் தயாரிப்பாளர்

இந்தியத் திரையுலகத்தில் தங்கள் நடிப்பின் மூலம் பிரபலமாகி, கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு தயாரிப்பில் இறங்கும் பல நடிகர்கள் இருக்கிறார்கள். சிலர் மட்டும் தொடர்ந்து படங்களைத் தயாரிப்பதும், சிலர் சில படங்களைத் தயாரித்துவிட்டு விலகி விடுவதும் உண்டு.

பான் இந்தியா அளவில் பிரபலமான சில நடிகர்கள் தற்போது சம்பளத்தை முழுவதும் வாங்கிக் கொள்ளாமல், 'லாபத்தில் பங்கு' என்ற அடிப்படையில் மாறியிருக்கிறார்கள். சில நடிகர்கள் படத்தில் இணை தயாரிப்பாளர்களாக இணைந்தும் வருகிறார்கள்.

அந்த விதத்தில் கன்னடத் திரையுலகத்தில் 'கேஜிஎப் 2' படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் யஷ். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகியுள்ள 'டாக்சிக்' படத்தையும், ஹிந்தியில் தயாராகி வரும் 'ராமாயணா' படத்தையும் அவர் இணைந்து தயாரித்துள்ளார். இரண்டு படங்களுமே பிரம்மாண்டமான பான் இந்தியா படங்கள்.

ஒரு பஸ் டிரைவரின் மகனாகப் பிறந்து, நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து, டிவி சீரியல்கள் பக்கம் போய், பின்னர் சினிமாவில் அறிமுகமாகி, இந்திய அளவில் பிரபலமாகி இன்று பான் இந்தியா படங்களின் தயாரிப்பாளர் என்ற நிலைக்கு தன்னுடைய உழைப்பால் உயர்ந்திருக்கிறார் யஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !