ஏ.ஐ.,யின் தாக்கம் கவலையளிக்கிறது : கிர்த்தி ஷெட்டி
நடிகை கிர்த்தி ஷெட்டி தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்து பிஸியான இளம் நடிகையாக வலம் வருகிறார். தற்போது ஹிந்தி மொழி படங்களில் நடிக்கவும் தொடங்கியுள்ளார். நவீன தொழில்நுட்பத்தின் ஏஐ.,யின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது பல நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டாலும் நெகட்டிவ் விஷயங்கள் அதிகம் பாதிப்பை தருகின்றன.
ஏ.ஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, அது சமூக வலைதளங்களில் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து கிர்த்தி கூறியதாவது, சமூக வலைதளங்களில் எது உண்மை, எது பொய் என்று கண்டறிய முடியாத அளவிற்கு ஏ.ஐ ஆக்கிரமித்து கவலையை அளிக்கிறது. சமீபத்தில் நான், ஒரு ஆணுடன் நெருக்கமாக உள்ளது போல் ஒரு போலி புகைப்படம் வெளியானது. அதைக் கண்டு என் அம்மாவே அதிர்ச்சியடைந்தார். பிரபலங்களுக்கே இந்த நிலை என்றால், சாதாரண பெண்களின் பாதுகாப்பு என்னவாகும்? இதை எப்படி கட்டுப்படுத்துவது? என கீர்த்தி ஷெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.