வெற்றியும், தோல்வியும் சமம் : பூஜா ஹெக்டே பதில்
ADDED : 144 days ago
நடிகை பூஜா ஹெக்டே ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உள்ள முக்கிய நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது தமிழில் விஜய்யுடன் இணைந்து 'ஜனநாயகன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்னையால் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4' படத்திலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் பூஜா ஹெக்டே அளித்த பேட்டியில் கூறியதாவது, சினிமாவில் வெற்றி, தோல்வி என்பது சமம் தான். நானும் அப்படித்தான் படங்களின் வெற்றி, தோல்விகளை கடந்துதான் பயணித்து வருகிறேன். எதுவாக இருந்தாலும் என் மனநிலையை கவலைப்படுத்தாது. வழக்கம்போல் படங்களில் பிஸியாக நடிக்கிறேன். மற்றபடி எந்த யூகங்களுக்கும் பதில் கூற விரும்பவில்லை என்கிறார்.