உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காந்தி கிருஷ்ணா இயக்கும் பிரேக் பாஸ்ட் கதை என்ன

காந்தி கிருஷ்ணா இயக்கும் பிரேக் பாஸ்ட் கதை என்ன

செல்லமே, ஆனந்த தாண்டவம் படங்களுக்குபின் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா இயக்கி உள்ள படம் பிரேக்பாஸ்ட். இது குறித்து அவர் பேசுகையில், ‛‛ராணவ், ரோஸ்மின், கஸ்துாரி, அர்ச்சனா, சம்பத்குமார் நடித்துள்ளனர். இன்றைய காதல், பிரிவு, குடும்ப வாழ்க்கை,டைவர்ஸ் என பல விஷயங்களை கதை பேசுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ராணவ். மலையாளத்தில் நடித்தவர் ரோஸ்மின். குலுமணாலி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

சின்ன வயதில் இருந்து ஜி.வி.பிரகாஷ் பழக்கம். இக்கட்டான நேரத்திலும் இந்த படத்துக்காக பாடல் கொடுத்தார். நான் இயக்க இருந்த சில படங்கள் டிராப் ஆகிவிட்டது. பட்ஜெட், கால சூழல் காரணம். இப்போதும் என் குருநாதர் ஷங்கர் மீது மரியாதையாக இருக்கிறேன். அவர் அழைத்ததால் அவர் படப்பிடிப்புக்கு சென்று வேலை செய்கிறேன். இந்தியன் 2 படத்தில் கூட பணியாற்றினேன். சுஜாதா மீது எனக்கு தனி பாசம் உண்டு. அவருடன் இணைந்து பணியாற்றிய நாட்கள், கற்றுக் கொண்ட நாட்கள் இனிமையானவை. அந்த அனுபவத்தில் காதல், யூத் படங்களை தொடர்ந்து இயக்குகிறேன்'' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !