உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சட்டசபை தேர்தலால் 2 வாரங்கள் பட ரிலீஸ் முடக்கம்

சட்டசபை தேர்தலால் 2 வாரங்கள் பட ரிலீஸ் முடக்கம்

தமிழில் நேற்று காளிதாஸ் 2, லீடர், நீளிரா, கார்மேனி செல்வம், பைக்கர் உள்ளிட்ட 5 படங்கள் ரிலீஸ் ஆன நிலையில், அடுத்த வாரம் எல்ஐகே, மனிதன் தெய்வமாகலாம், டிஎன்2026, பள்ளிச்சட்டம்பி, அமைதிப்படை (ரீரிலீஸ்) உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. ஏப்ரல் 17, ஏப்ரல் 24 ஆகிய தேதிகளில் எந்தபடம் ரிலீஸ் ஆகிறது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கும் நிலையில், தேர்தல் சமயத்தில் புதுப்படங்கள் தேவையா என பலர் யோசிக்கிறார்கள்.

இந்நிலையில் இன்வெஸ்டிகேஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் ரூம் பாய் ஏப்ரல் 17ம் தேதி ரிலீஸ் என படக்குழு அறிவித்துள்ளது. சி.நிகில், ஹர்ஷா நடிக்க, ஜெகன் ராயன் இயக்கி உள்ளார். படத்தின் தலைப்புக்கு ஏற்ப, ஹீரோ ரூம்பாய் ஆக வருகிறார். திருப்பத்தூர், ஏலகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அடுத்த சில நாட்களில் ஏப்ரல் 17, 24ல் ரிலீஸ் ஆக படங்களின் அறிவிப்பு வர வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !