உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : இளையராஜாவால் இசை அமைப்பாளரான கே.பாக்யராஜ்

பிளாஷ்பேக் : இளையராஜாவால் இசை அமைப்பாளரான கே.பாக்யராஜ்

இயக்குனர் கே.பாக்யராஜுக்கு இசைஞானம் இல்லாவிட்டாலும், இசை ஆர்வம் உண்டு. சுயமாகவே மெட்டு போட்டு பாடல்களும் எழுதுவார். ஒரு முறை இளையராஜாவிற்கும், பாக்யராஜிற்கும் மனகசப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் மன வேதனை அடைந்த கே.பாக்யராஜ் முறைப்படி இசை கற்க ஆரம்பித்தார். ஆர்மோனியத்தின் முன் அமர்ந்து அவர் இசை வாசிக்கும் புகைப்படங்கள் அப்போது பரவலாக வெளியானது.

ஒரு முறை தன்னை சந்தித்த கே.பாக்யராஜிடம் “நான் ஆர்மோனியத்தை சரஸ்வதி மாதிரி வணங்குவேன். நீ எப்படி அதை தொடலாம்” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த கே.பாக்யராஜ் “சரஸ்வதியை நீங்க மட்டும்தான் கும்பிடணுமா, நான் கும்பிடக்கூடாதா?” என்று சொல்லிவிட்டு வந்து விட்டார்.

அதன்பிறகு தனது படங்களுக்கு தானே இசை அமைப்பது என்று முடிவு செய்து 'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். இவர் இசை அமைத்த 'ஆராரோ ஆரிரோ' படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டானது. மேலும் சில படங்களுக்கு இசை அமைத்த கே.பாக்யராஜ் பின்னர் இளையராஜாவுடன் சமாதானமானதும் இசை அமைப்பதை கைவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !