உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் 'ஏஏ 22, ஏ 6' அப்டேட் வருமா ?

அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் 'ஏஏ 22, ஏ 6' அப்டேட் வருமா ?

'புஷ்பா 2' படத்தின் மாபெரும் வசூலுக்குப் பிறகு தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை தமிழ் இயக்குனரான அட்லீ இயக்கி வருகிறார். 'ஏஏ 22 ஏ 6' என அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

அடுத்த வருட கோடை விடுமுறையில்தான் இப்படம் வரும் என்று தகவல். இருந்தாலும் இன்னும் சில தினங்களில் ஏப்ரல் 8ம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாளன்று படத்தின் அப்டேட் ஏதாவது வருமா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

படத்தின் டீசர் ஏதாவது வருமா அல்லது படத்தின் தலைப்பு பற்றி அறிவிப்புடன் புதிய போஸ்டர் வருமா என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். பொதுவான பான் இந்தியா படங்களின் அப்டேட்கள் இப்படி படத்தின் கலைஞர்களின் பிறந்த நாட்களில் வெளியாவது வழக்கம். அதனால், ஏப்ரல் 8 நிச்சயம் ஏதாவது ஒரு அறிவிப்பு வரும் என்று அல்லு அர்ஜுன் ரசிகர்களும் நம்புகிறார்கள்.

சாய் அபயங்கர் இசையமைக்கம் இப்படத்தில் தீபிகா படுகோனே, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சயின்ஷ் பிக்ஷன் படமாக இப்படம் உரவாகி வருகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !