உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டிமாண்டி காலனி 3' பணிகள் நிறைவு : மிரட்டல் போஸ்டர் வெளியீடு

'டிமாண்டி காலனி 3' பணிகள் நிறைவு : மிரட்டல் போஸ்டர் வெளியீடு

அருள்நிதி நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் 'டிமான்டி காலனி'. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் பாகம் வெளியானது. தற்போது 3ம் பாகம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்துள்ளனர். அதோடு ஒரே சவக்குழிக்குள் மூன்று பேர் படுத்திருப்பது மாதிரியான மிரட்டல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இதோடு மேக்கிங் வீடியோ ஒன்றையும் வெளிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !