உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சைப் அலிகான் ஒரு முதிர்ச்சியடைந்த குழந்தை : பிரியதர்ஷன்

சைப் அலிகான் ஒரு முதிர்ச்சியடைந்த குழந்தை : பிரியதர்ஷன்

2016-ல் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கிய படம் ஒப்பம். மலையாளத்தில் வரவேற்பை பெற்றது. அதே கதையை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளார் பிரியதர்ஷன். சைப் அலிகான் நடிக்கும் இந்த த்ரில்லர் படத்திற்கு ஹைவான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் முதன்முறையாக சைப் அலிகானுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து பிரியதர்ஷன் கூறுகையில், சைப் அலிகான் ஒரு சுவாரஸ்யமான முதிர்ச்சியடைந்த ஒரு குழந்தை. தினமும் காலையில் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே தனது கதாபாத்திரம் மற்றும் காட்சிகள் குறித்துப் பல கேள்விகளுடன் வருவார். அவருடன் பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவமாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பிரியதர்ஷன் மற்றும் சைப் அலிகான் கூட்டணியில் உருவாகும் முதல் படம் ஹைவான். இப்படத்தின் மூலம் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சைப் அலிகானும், அக்ஷய் குமாரும் மீண்டும் திரையில் ஒன்றிணைகிறார்கள். இதில் சைப் அலிகான் கண் பார்வை இல்லாதவராக நடிக்க, அக்ஷய் குமார் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 11 ஆம் தேதி திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !