உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்பிரிட் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு : தீவிர உடற்பயிற்சியில் இறங்கும் பிரபாஸ்

ஸ்பிரிட் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு : தீவிர உடற்பயிற்சியில் இறங்கும் பிரபாஸ்

நடிகர் பிரபாஸ் தற்போது ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகி வரும் பௌசி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் இமான்வி, அனுபம்கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

டோலிவுட் வட்டார தகவல்களின்படி, பௌசி படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தில் முழுவீச்சில் நடிக்கப்போகிறார் பிரபாஸ். காவல்துறை மையப்படுத்தப்பட்ட கதைக் களத்திற்காக ஒரு புதிய மற்றும் வித்தியாசமான தோற்றத்தைப் பெறவதற்காக கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சியை கடைபிடிக்க உள்ளார்.

இந்த இரண்டு திரைப்படங்கள் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான அடையாளத்தை திரையில் கொண்டு வர பிரபாஸ் தனது முழு உழைப்பையும் கொடுத்து வருவதாக கூறுகிறார்கள். மேலும், ஸ்பிரிட் படத்தில் பிரபாஸுடன் டிருப்தி டிம்ரி, விவேக் ஓபரா, பிரகாஷ்ராஜ், காஞ்சனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !