உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கதாநாயகி இல்லாமல் உருவாகும் அஜய் தேவ்கனின் 'கோல்மால் 5'

கதாநாயகி இல்லாமல் உருவாகும் அஜய் தேவ்கனின் 'கோல்மால் 5'


பாலிவுட்டில் அவ்வப்போது மிகப்பெரிய ஹிட்டான படங்களின் மூன்றாம் பாகங்கள், அதையும் தாண்டி நான்காம் பாகங்கள் வரை எடுக்கப்படுவது உண்டு. அந்த வகையில் பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி டைரக்ஷனில் அஜய் தேவ்கன் கூட்டணியில் கடந்த 2006 முதல் 2017 வரையிலான 17 வருடங்களில் 'கோல்மால்' திரைப்படம் அடுத்தடுத்து நான்கு பாகங்களாக வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஐந்தாம் பாகம் தயாராக இருக்கிறது என்கிற தகவல் சமீபத்தில் வெளியானது.

ஆனால் ஆச்சரியமாக இந்த படத்தில் அஜய் தேவனுக்கு ஜோடியும் இல்லை. அதனால் அவருக்கு ரொமான்ஸும் இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்த படத்தில் பிரியாமணி நடித்தாலும் கூட அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க இருக்கிறாராம். இதுவரை வெளியான நான்கு பாகங்களின் பார்முலாவில் இருந்து இந்த படம் முற்றிலும் மாறுபட்டதாக உருவாக்க இயக்குனர் ரோஹித் ஷெட்டி திட்டமிட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !