வாசகர்கள் கருத்துகள் (1)
கண்டிப்பா வசூலிக்கும் அவன் எடுக்கற படம் எல்லாம் கேவலமா தான் இருக்கும் இப்ப இருக்கற சமுதாயம் அவ்ளோ கேவலமா தான் இருக்கிறது அந்த படத்தை எல்லோரும் பார்ப்பாங்க
தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து நாயகனாக மாறியவர்களின் வரிசையில் சேர்ந்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அவர் இயக்குனராக அறிமுகமான 'கோமாளி' படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படம்.
அவரது இரண்டாவது படமான 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் அறிமுகமானார். அந்தப் படம் 100 கோடி வசூலைக் கடந்தது. அவர் நாயகனாக நடித்து கடந்த வருடத் துவக்கத்தில் வெளிவந்த 'டிராகன்' படம் 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து கடந்த வருடத்தின் முக்கிய லாபகரமான படமாக அமைந்தது. கடந்த வருட தீபாவளிக்கு அவர் நாயகனாக நடித்து வெளிவந்த 'டியூட்' படமும் 100 கோடி வசூலைப் பெற்றது.
நாளை மறுநாள் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் கடந்த வருடமே வெளிவந்திருந்தால் ஒரே வருடத்தில் ஹாட்ரிக் 100 கோடி பெற்ற நாயகன் என்ற பெருமையைப் பெற்றிருப்பார். இந்தப் படமும் 100 கோடி வசூலைப் பெற்றால் தொடர்ந்து 4வது 100 கோடியைப் பெற்ற ஒரே நாயகனாக இருப்பார். சில பல தாமதத்திற்குப் பின் வெளியாகிறது இந்தப் படம்.
2040ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம் இளம் ரசிகர்களுக்குப் பிடித்துப் போனால் இதுவும் 100 கோடி வசூலிக்கலாம்.
கண்டிப்பா வசூலிக்கும் அவன் எடுக்கற படம் எல்லாம் கேவலமா தான் இருக்கும் இப்ப இருக்கற சமுதாயம் அவ்ளோ கேவலமா தான் இருக்கிறது அந்த படத்தை எல்லோரும் பார்ப்பாங்க