உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முடிவுக்கு வந்த 'அரசன்' பஞ்சாயத்து : முடித்து வைத்த தயாரிப்பாளர் தாணு

முடிவுக்கு வந்த 'அரசன்' பஞ்சாயத்து : முடித்து வைத்த தயாரிப்பாளர் தாணு

சிம்பு நாயகனாக நடிக்க, வெற்றிமாறன் இயக்க, தாணு தயாரிக்கும் படம் 'அரசன்'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. தங்களிடம் இருந்து பெற்ற முன்பணத் தொகையை சிம்பு திருப்பித் தர வேண்டும். அதுவரை 'அரசன்' படப்பிடிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கமும், பெப்ஸியும் இணைந்து அப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்தினார்கள். இது குறித்து சிம்புவின் அப்பா டி ராஜேந்தர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இதனிடையே, நேற்று இது குறித்து தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி, தயாரிப்பாளர்கள் தாணு, ஐசரி கணேஷ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்கள். அதன் முடிவில் ஐசரி கணேஷ் சொன்ன 7.5 கோடி ரூபாயை சிம்பு சார்பாக தருவதாக தயாரிப்பாளர் தாணு உறுதி அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து பஞ்சாயத்து முடிவுக்கு வந்துள்ளது.

சிம்பு நடிக்க தான் தயாரித்த 'வெந்து தணிந்தது காடு' படத்திற்கும் இது போலவே சிலர் புகார் அளித்தார்கள். அதன்பின் அவர்களுக்கு சேர வேண்டிய தொகையைக் கொடுத்த பிறகுதான் படப்பிடிப்பு நடந்தது என ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று(ஏப்., 9) தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்களாம். அதில் சிம்பு கலந்து கொள்வாரா என்பது இனிமேல்தான் தெரியும் என்கிறார்கள். பஞ்சாயத்து முடிவுக்கு வந்ததை அடுத்து 'அரசன்' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Premanathan S, Cuddalore
2026-04-09 21:21:03

டிரம்ப் பஞ்சாயத்தும் ஓயாது இவன் பஞ்சாயத்தும் முடியாது இவன் படமும் ஓடாது