பிளாஷ்பேக் : 4 இசை கலைஞர்கள் இணைந்து தயாரித்த படம்
ADDED : 11 hours ago
அந்தக் காலத்தில் பல படங்கள் இசைக்காவும், பாடல்களுக்காவும் ஒடியதால் பாடலாசிரியர்களுக்கும், இசை அமைப்பாளர்களுக்கும் படம் தயாரிக்கும் ஆசை வந்தது. இதனை கண்ணதாசன் தொடங்கி வைத்தார். பின்னாளில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா முதல் ஜி.வி.பிரகாஷ் வரை படம் தயாரித்தார்கள்.
இப்படியான நிலையில் 1989ம் ஆண்டு இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன், வயலின் இசை கலைஞர் வயலின் மகாதேவன், பாடகர் வி.கே.முத்துராமலிங்கம், பாடலாசிரியர் மருதகாசி ஆகியோர் இணைந்து 'அல்லி பெற்ற பிள்ளை' என்ற படத்தை தயாரித்தார்கள். இது அப்போது வெளிவந்த டொங்கா வாலி என்ற ஹிந்திப் படத்தின் ரீமேக்.
படத்தை கே.சோமு இயக்கினார். ஏ.பி.நாகராஜன் திரைக்தை எழுதினார். எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம், பண்டரிபாய், எஸ்.வி.சகஸ்ரநாமம், உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.