ஜனநாயகன் திரைப்படத்தின் 5 நிமிட காட்சி 'லீக்'
ADDED : 177 days ago
த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் நடித்த, ஜனநாயகன் திரைப் படத்தின், ஐந்து நிமிட காட்சிகள், சமூக வலை தளங்களில் வெளியானது, படக்குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடிப்பில், 'ஜனநாயகன்' திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம், பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், சென்சார் சான்றிதழ் கிடைக்காததால், படம் வெளியீடு தள்ளிப்போனது.
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் ஐந்து நிமிட காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியானது.
விஜயின் அறிமுக காட்சி; சிறையில் நடக்கும் சண்டை காட்சி; எம்.ஜி.ஆர் புகைப்படம் ஆகியவை, அதில் இடம் பெற்றுள்ளன. இது, படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.