தெலுங்கில் 'எல்ஐகே' காலை காட்சிகள் ரத்து
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் இன்று தமிழ், தெலுங்கில் வெளியாகி உள்ள படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'.
இப்படத்தின் தெலுங்குப் பதிப்பு காலை காட்சிகள் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன. படத்தைத் திரையிடுவதற்கான 'கேடிஎம்' குறித்த நேரத்தில் தரப்படவில்லை என்பதால் இது நடந்திருக்கிறது. தெலுங்கிலும் பிரதீப் ரங்கநாதனுக்கு குறிப்பிடத்தக்க மார்க்கெட் உள்ளது.
மதியக் காட்சிகள் திட்டமிட்டபடி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே பல தடைகளைக் கடந்து இன்று வெளியாகும் படத்திற்கு தெலுங்கில் இப்படி ஏற்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
தமிழில் சிறப்பு காலை காட்சிகள் திட்டமிட்டபடி நடந்துள்ளது. படம் சுவாரசியமாக இருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.