200 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சிகிரி சிகிரி' பாடல்
ADDED : 4 days ago
புச்சி பாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ராம் சரண் தேஜா, ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பெத்தி'.
இப்படத்தின் முதல் சிங்கிளாக 'சிகிரி சிகரி' தெலுங்குப் பாடல் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியானது. அந்தப் பாடலுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது அந்தப் பாடல் 200 மில்லியன் பார்வைகளை யு டியூப் தளத்தில் கடந்துள்ளது. அதன் ஹிந்திப் பதிப்பு 55 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
படத்தின் இரண்டாவது பாடலாக வெளிவந்த 'ராய் ராய் ரா ரா' பாடல் தற்போது 58 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது.