உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிஸியான நடிகையாக கயாடு லோஹர்

பிஸியான நடிகையாக கயாடு லோஹர்


மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் கயாடு லோஹர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கயாடு, புனேவில் படித்து வளர்ந்தார். 2021ல் வெளிவந்த 'முகில்பேட்' என்ற கன்னடப் படத்தில் அறிமுகமானார். அதன்பின் மலையாளம், தெலுங்கு, மராத்தி மொழிகளிலும் நடித்தார்.

கடந்த வருடம் வெளிவந்து 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்த 'டிராகன்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றி அவருக்கு அடுத்தடுத்து புதிய வாய்ப்புகளை மற்ற மொழிகளிலும் பெற்றுத் தந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.

மலையாளத்தில் அவர் நாயகியாக நடித்துள்ள 'பள்ளிச்சட்டம்பி' படம் இன்னும் சில நாட்களில் ஏப்ரல் 15ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கடுத்து மலையாளத்தில் 'ஐம் கேம், தாரம்' படங்களிலும், தெலுங்கில் 'தி பாரடைஸ்' தமிழில் 'இதயம் முரளி, இம்மார்டடல், சிம்பு 49' ஆகிய படத்திலும், நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடித்த ஆல்பம் பாடலான சாய் அபயங்கரின் 'பவழமல்லி' பாடல் அவரை இன்னும் அதிகமாக ரசிகர்களைக் கவர வைத்தது. கடந்த சில வாரங்களாக அவரது வீடியோக்களாலும் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நேற்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடிய கயாடு லோஹருக்கு அவர் நடித்து வரும் படங்களின் குழுவினரும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !