உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்' லீக், சைபர் கிரைம் விசாரணை ஆரம்பம்

'ஜனநாயகன்' லீக், சைபர் கிரைம் விசாரணை ஆரம்பம்


விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படம் இரு தினங்களுக்கு முன்பு இணையதளங்களில் திருட்டுத்தமாக லீக் ஆனது. அது குறித்து சைபர் கிரைம் அலுகலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் விசாரணையை ஆரமபித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அது மட்டுமல்லாது தயாரிப்பு நிறுவனமும் அவர்கள் தரப்பில் எந்த இடத்திலிருந்து படம் திருடப்பட்டிருக்கும் என்பதையும் விசாரித்துக் கொண்டிருக்கிறார்களாம். சுமார் 500 கோடி ரூபாய் செலவில் தயாராகி உள்ளதாக சொல்லப்படும் இந்தப் படத்தின் லீக் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய சங்கங்கள், முக்கிய நடிகர்கள், மற்ற மொழி நடிகர்கள் என பலரும் இது குறித்து தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். அடுத்த சில நாட்களிலேயே விசாரணை முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

லீக் ஆன காட்சிகளில் 'எடிட் ரெப்' மற்றும் 14 ஜனவரி 2026 என்ற தேதி உள்ளதால் அதைத் தொடர்ந்தே விசாரணை ஆரம்பமாகி உள்ளதாகச் சொல்கிறார்கள். அரசியல் ஆதாயத்திற்காகவும் லீக் செய்யப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறார்கள் எனத் தகவல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !