உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் மீண்டும் 'துரந்தர்': இந்த வாரம் மிஸ் பண்ணிடாதீங்க...!

ஓடிடியில் மீண்டும் 'துரந்தர்': இந்த வாரம் மிஸ் பண்ணிடாதீங்க...!


தியேட்டரில் வெளியாகும் படங்களைக் கொண்டாடுவது போல, ஓடிடியில் வெளியாகும் புதுப்படங்களையும் கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் பல புதியப்படங்கள் வெளியாகவுள்ளன.

துரந்தர்-2

உலகளவில் மிகப்பெரிய வசூலை வாரிக் குவித்த 'துரந்தர்-2' Raw மற்றும் Udheka எனும் வடிவில் நாளை (ஜூன் 5ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

பேட்ரியாட்

மலையாள சூப்பர் ஸ்டார்கள் மோகன்லால், மம்முட்டி, நயன்தாரா, பஹத் பாசில், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பேட்ரியாட்'. ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த படம் நாளை (ஜூன் 5ம் தேதி) ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.

கார்மேனி செல்வம்

இயக்குநர் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கவுதம் மேனன், அபிநயா, லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'கார்மேனி செல்வம்'. இந்த திரைப்படம் நேற்று (ஜூன் 3ம் தேதி) அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.

29

இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில், ப்ரீத்தி அஸ்ராணி, விது, மாஸ்டர் மகேந்திரன், ஷெனாஸ் பாத்திமா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் '29'. இந்த படம் நாளை (ஜூன் 5ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

கேடி:தி டெவில்

கன்னடத்தில் வெளிவந்த க்ரைம், த்ரில்லர் படம் 'கேடி: தி டெவில்'. இந்த படம் நாளை ( ஜூன் 5ம் தேதி) ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.

தி ரைஸ் ஆப் அசோகா

காந்தாரா படத்தில் நடித்துப் புகழ்பெற்ற சப்தமி கவுடா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ' தி ரைஸ் ஆப் அசோகா'. 1970களில் நடக்கும் சமூக -அரசியல் போராட்டம் மற்றும் புரட்சியை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் நாளை (ஜூன் 5ம் தேதி) சன் நெக்ஸ்டில் வெளியாகவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !