உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத்

'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத்


நடிகர் பரத் 2000ம் காலகட்டத்தில் திரையுலகில் நுழைந்து ஒரு சில வெற்றி படங்கள் தந்து முன்னனி நடிகராக வலம் வந்தவர். 2010 காலகட்டத்திற்கு பிறகு அவர் நடித்த பெரும்பாலான படங்கள் தொடர் தோல்வியை தழுவியது.

சமீபத்தில் பரத் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் நீங்கள் இந்த படத்தை மிஸ் செய்து விட்டோம் என ஏதாவது படத்தை நினைத்தது உண்டா? என்கிற கேள்விக்கு பரத் கூறியதாவது, முதலில் தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம் படம் என்னை தான் தேடி வந்தது. நான் நடிக்காமல் மிஸ் செய்தேன். பின்பு தனுஷ் நடித்தார். அதேபோல் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கோ' படத்தில் முதலில் சிம்பு நடிக்கவிருந்தார். ஒரு சில காரணங்களால் சிம்பு வெளியேற கே.வி. ஆனந்த் சார் என்னை தான் நடிக்க கேட்டார். அப்போது நான் படப்பிடிப்பில் இருந்ததால் நான் பதில் சொல்ல இரண்டு நாட்கள் தாமதம் ஆக அவர்கள் வேகமாக ஷூட்டிங் போகவேண்டிய கட்டாயத்தில் ஜீவாவை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பு சென்று விட்டனர். என சற்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் பரத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !