உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்!

'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்!


நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து 'தாய் கிழவி' படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் 'சேயோன்' என்கிற படத்தில் தான் நடிக்கவுள்ளார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி இது மதுரை பின்புலத்தில் நடைபெறும் கதை களத்தை மையப்படுத்தி உருவாகிறது என உறுதியானது. இன்னும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது குறித்து தகவல் இல்லை.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை பாக்ய ஸ்ரீ போர்ஸ் சென்னை வந்துள்ளார். ஏனெனில், சேயோன் படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு பணிகளுக்காக தான் பாக்ய ஸ்ரீ வந்துள்ளார் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !