மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா
நடிகை ஸ்ரீ லீலா தெலுங்கு சினிமாவின் மூலம் பிரபலமாகி தமிழ், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடிக்க தொடங்கியுள்ளார்.
சமீபகாலமாக சில பிரபலமான நடிகைகள் பெண்களுக்கு உள்ள மாதவிடாய் பிரச்னைகளில் படப்பிடிப்பில் நடிப்பது குறித்து பேசி வருகின்றனர். இது குறித்து ஸ்ரீ லீலா தற்போது ஒரு பேட்டியில் கூறியதாவது, மாதவிடாய் நமக்குப் பிரச்னையாக இருக்கக் கூடாது. நான் மாதவிடாயின் போது பல பாடல்களுக்கு நடனமாடியுள்ளேன். அந்தப் பாடல்களும் ஹிட் ஆகியுள்ளது. ஆண்களைப் போலவே நாமும் சம உரிமை வேண்டுமென பேசுவதால், மாதவிடாயை ஒரு பிரச்னையாகப் பேசுவது சரியா? நாம் இந்த விஷயத்தில் சிந்தனையை இன்னும் கொஞ்சம் உயர்த்தி கொள்ள வேண்டும். இந்த மனத்தடையை நாம் ஒரு சாக்கு போக்காக சொல்லக்கூடாது. என பக்குவமாக கையாண்டார்.
கண்டிப்பாக இதனை சில நடிகைகள் பார்த்து எப்படி பக்குவமாக கையாள்வது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.