உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவுரிக்கு மைல்ஸ்டோனாக அமையப்போகும் 'தாரகை'

கவுரிக்கு மைல்ஸ்டோனாக அமையப்போகும் 'தாரகை'

96, மாஸ்டர், கர்ணன், லவ்வர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கவுரி கிஷன். தற்போது அவர் 'தாரகை' என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்து வருகிறார். கிரிஷ் எழுதி இயக்குகிறார். காளி வெங்கட், ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்பீட் ரீல்ஸ் ஸ்டூடியோ தயாரிக்கிறது. சித்து குமார் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நாயகி கவுரி கிஷன் திருமண கோலத்துடன் வீட்டை விட்டு ஓடிவந்து சென்னை பஸ்சை வழிமறித்து ஏறிச் செல்லும் காட்சி இதில் இடம்பெற்றுள்ளது.“என்று ஒரு பெண் இரவில் சாலைகளில் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடுகிறாளோ, அன்றுதான் இந்தியாவில் உண்மையான சுதந்திரம் தினம்”என்பதோடு தொடங்குகிறது.

“ஒரு பெண்ணின் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், பயணம், உறவுகள், வாழ்க்கைத் தேர்வுகள் மற்றும் சுதந்திரம் குறித்த கேள்விகளை முன்வைக்கும். ஒரு பயணம், ஒரு தேடல், பல பெண்களின் பாதைகள் தான் இதன் கதை. கவுரி கிஷன் கேரியரில் அவருக்கு இந்த படம் ஒரு மைல்ஸ் ஸடோனாக இருக்கும் ” என்று படக்குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !