உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மரகத நாயணம் 2 படப்பிடிப்பு நிறைவு

மரகத நாயணம் 2 படப்பிடிப்பு நிறைவு

கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'மரகத நாணயம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. பேஷன் ஸ்டுடியோஸ், டங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் பிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

முதல் பாகத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இந்த பாகத்தையும் இயக்கி உள்ளார். முதல் பாகத்தில் நடித்த ஆதி, நிக்கி கல்ராணி, முனீஷ்காந்த், ஆனந்த்ராஜ், டேனியல் ஆனி போப், அருண்ராஜா காமராஜ், முருகானந்தம் ஆகியோர் இந்த பாகத்திலும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர, சத்யராஜ் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். தீபக் மேனன் மற்றும் பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். தற்போது இதன் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து அதற்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நவம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !