லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படம் ரிலீஸ் எப்போது?
ADDED : 1 hours ago
விஷால் வெங்கட் இயக்கத்தில் நாசர், ரெஜினா கஸாண்ட்ரா, ரமேஷ் திலக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் தனது, ஜீ ஸ்குவாட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.
டிராமா திரில்லராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் தொடக்க விழா அண்மையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்தை பற்றிய அறிவிப்பை படக்குழு பிரத்யேக காணொளியாக வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்திற்கான டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.