உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரச்சிதா ராம் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சிய ரசிகர்

ரச்சிதா ராம் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சிய ரசிகர்

கன்னடத் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரச்சிதா ராம். தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படத்திலும் நடித்துள்ளார். அவருடைய பொது நிகழ்ச்சி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு இன்று ரசிகர்களை சந்தித்துள்ளார். ரசிகர்கள் அவரை வாழ்த்தி கை குலுக்கி விட்டுச் சென்றனர். ஆர்வ மிகுதியில் ஒரு ரசிகர் செல்வி எடுத்து, பின்னர் ரச்சிதாவின் கன்னத்தை இரு கைகளிலும் கிள்ளி கொஞ்சி விட்டுச் சென்றார். அவரது இந்த திடீர் செய்கையால் அதிர்ச்சியடைந்த ரச்சிதா பின்னர் அதை ஏற்றுக் கொண்டது போல சிரித்தார்.

இந்த வீடியோ காலையில் இருந்தே சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அது குறித்து பலரும் பலவிதமான கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ரச்சிதா ராம் அக்கா நித்யா ராம் தமிழில் “அவள், நந்தினி, நந்தினி குடும்பம், அண்ணா” உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !