கருப்பு படத்தின் மூன்றாம் பாடல் நாளை (ஏப். 14) வெளியாகிறது
ADDED : 4 hours ago
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா 'கருப்பு' படத்தில் நடித்துள்ளார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, சிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு பலகட்டங்களாக நடந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. கருப்பு திரைப்படம் வருகின்ற மே 14ம் தேதியன்று திரைக்கு வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் ‛காட் மோட், நாங்க நாலு பேரு....' என இரு பாடல்கள் வெளியாகின. இப்போது மூன்றாம் பாடலை நாளை ஏப்ரல் 14ம் தேதியன்று தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியிடுவதாக புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.