உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹரி, அதர்வா புதிய கூட்டணி

ஹரி, அதர்வா புதிய கூட்டணி

கடந்த ஆண்டு நடிகர் பிரசாந்த்தின் பிறந்தநாள் தினத்தன்று பிரசாந்த்தின் 55வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார் என அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த படத்தில் சில பிரச்னை நிலவுகிறது. படம் துவங்க தாமதமாகும் என ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் படம் டிராப் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இது ஒரு நல்ல கமர்ஷியல் கதை என்பதை புரிந்து கொண்ட ஹரி, சமீபத்தில் நடிகர் அதர்வாவை சந்தித்து கதை கூறியுள்ளார். அதர்வா இந்த கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !