உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛கான்சிட்டி' படத்தில் வைரலாகும் கொரியன் பேமிலி சாங்

‛கான்சிட்டி' படத்தில் வைரலாகும் கொரியன் பேமிலி சாங்

அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‛கான் சிட்டி' படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் முதல் பாடலாக மோகன் ராஜன் எழுதியுள்ள ராரா ரங்கையா என்ற பாடல் வெளியாகியுள்ளது. விக்கி, சுப்லாஷினி, லீலா ஆகியோர் பாடியுள்ள இந்த பாடல் “கொரியன் பேமிலி சாங்” என சுவாரஸ்யமான தலைப்புடன் வெளியாகியுள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் சேர்ந்து ஆடும் குத்தாட்டபாடலாக இது உருவாகி உள்ளது. இதை படத்தின் புரொமோ பாடலாகவும் வெளியிட்டுள்ளனர். நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு கான்சிட்டி படம் நகர்கிறதாம். விரைவில் படம் ரிலீஸாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !