உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தர்மன் : மூவர் போட்டோ போட்டு 'டெலிட்' செய்த ராஷி கண்ணா

தர்மன் : மூவர் போட்டோ போட்டு 'டெலிட்' செய்த ராஷி கண்ணா


நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், சிம்ரன், ராஷி கண்ணா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தர்மன்'.

இப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்ததாக நேற்று படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து சில புகைப்படங்களுடன் அப்டேட் கொடுத்திருந்தார்.

இப்படத்திற்காக சில நாட்களாக மைசூரில் உள்ள ஒரு கோயிலில் பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மைசூரில் படப்பிடிப்புக் குழுவினர் தங்கியிருந்து இந்தக் காட்சிகளை நடித்துள்ளனர்.

படத்தில் ரஜினியின் மகளாக நடிப்பதாகச் சொல்லப்படும் ராஷிகண்ணா, நேற்று அவருடைய சமூக வலைதளத்தில் ரஜினிகாந்த், ராம் பொதினேனி ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து பின்னர் அதை 'டெலிட்' செய்துவிட்டார். இப்படத்தில் ராம் பொதினேனி நடிப்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அதனால்தான் ராஷி கண்ணா அதை டெலிட் செய்துள்ளதாகத் தெரிகிறது.

அதற்குள் அந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் டவுன்லோட் செய்து, படத்தில் ராம் பொதினேனி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பகிர்ந்து வருகிறார்கள். இன்னும் ஒரு கட்டப் படப்பிடிப்புடன் 'தர்மன்' படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதாகச் சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !