மமிதா பைஜூ உடன் போட்டியா... : ப்ரீத்தி முகுந்தன் பேட்டி
கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள ‛அன்பில் அவன்' படம் நாளை மறுதினம் அக்., 2ல் ரிலீஸாகிறது. காதலும், ஆக் ஷனும் கலந்த திரில்லர் படமாக உருவாகி உள்ளது. நடிகை ப்ரீத்தி முகுந்தன் அளித்த பேட்டி...
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் தந்த அன்புக்கும், என்னை அவர்கள் ஏற்றுக் கொண்டதற்கும் நன்றி. இன்னும் நல்ல நல்ல படங்கள் பண்ணனும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது. தமிழ் சினிமாவில் பயங்கரமான ஒரு பெர்பாமென்ஸ் நடிகை என்றால் அது ராதிகா தான். எல்லா விதமான ரோல்களும் பண்ணுகிறார் என ஆச்சர்யப்பட்டுள்ளேன்.
ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இந்த லிஸ்ட் பெருசா இருக்கு.... இருந்தாலும் தனுஷ் உடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை சமீபத்தில் நடந்தது. மதுரை பின்னணியில் நடக்கும் கதைக்களம். இதுவரை நான் பண்ணிராத ஒரு ரோல்.
மமிதா பைஜூ உடன் போட்டியெல்லாம் கிடையாது. திறமையான நடிகை. என் வயதில் உள்ள அவர் நல்ல கதைகள், படங்கள் எடுத்து இந்த நிலைக்கு வந்துள்ளார். அவரை பார்க்கையில் நாமும் அது போன்று வர வேண்டும் என உந்துதலாக அவர் இருந்திருக்கிறாரே தவிர போட்டியாக நினைத்தது கிடையாது. அடுத்து இரண்டு பெரிய படம் பண்றேன். அதை அவர்களே அறிவிப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.