உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வரிசையாக ஏமாற்றம் கொடுத்த படங்கள்

வரிசையாக ஏமாற்றம் கொடுத்த படங்கள்

தமிழ்சினிமாவில் இந்த வாரம் ஆர்யா, கவுதம் கார்த்திக், சரத்குமார் நடித்த மிஸ்டர் எக்ஸ், புதுமுகங்கள் நடித்த ரூம்பாய் ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. ரூம் பாய் படம் வந்ததை தெரியவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிஸ்டர் எக்ஸ் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன. பெரியளவில் ஓபனிங், அடுத்து புக்கிங் இல்லை.

அதேபோல் மலையாளத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில் வந்த பள்ளிச்சட்டம்பி படமும் தமிழில் வரவேற்பை பெறவில்லை. கடந்த வாரம் வந்த படங்களில் எல்கேகே, மனிதன் தெய்வமாகலாம், டிஎன்2026 படங்கள் பெரிய வெற்றி படமாக அமையவில்லை. அதற்கு முந்தைய வாரமும் அப்படியே. ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் என்பதால், ஏப்ரல் 24ம் தேதி காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்த பிரேக்பாஸ்ட், புதுமுகங்கள் நடித்த கமாண்டோவின் லவ்ஸ்டோரி மற்றும் அஜித்தின் அமர்களம், விஜயின் சிவகாசி, மாதவனின் ரன் ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் ஆகின்றன. ஏப்ரல்30ம் தேதி தனுஷ் நடித்த கர வெளியாக உள்ளது. இந்த மாத படங்களில் கர படம் தமிழ் சினிமாவை கரை சேர்க்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !