ஹீரோ, வில்லன்: இரண்டு வேடங்களில் நடிக்கும் ஜே.டி சக்கரவர்த்தி
ADDED : 175 days ago
எம்3 மீடியா மற்றும் மஹா மூவீஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'சூனியம்' இந்த படத்தை சூர்யாஸ் இயக்குகிறார். மகர்ஷி கொண்ட்லா, மகேந்திர நாத் கொண்ட்லா தயாரிக்கிறார்கள். அச்சு ராஜாமணி இசை அமைக்கிறார். மிர்லான் நசீர் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து இயக்குனர் கூறும்போது சூனியம், கருமம், மர்ம நம்பிக்கைகள் போன்றவற்றின் அடிப்படையில் உருவாகும் திகில், மர்ம படமாக 'சூனியம்' உருவாகி வருகிறது. உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் உருவாகும் படம். பல பரிமாணங்களில் தன்னை நிரூபித்துள்ள நடிகர் ஜே.டி. சக்கரவர்த்தி, இந்த படத்தில் இதுவரை இல்லாத புதிய அவதாரத்தில் தோன்றுகிறார். ஹீரோவும், வில்லனுமாக இரட்டை கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். என்றார்.