உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெரம்பூர் ரயில் தொழிற்சாலையில் படமான 'அன்பே டயானா '

பெரம்பூர் ரயில் தொழிற்சாலையில் படமான 'அன்பே டயானா '

'ஜமா' புகழ் பாரி இளவழகன் இயக்கி, நடிக்கும் படம் 'அன்பே டயானா'. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சென்னையில் உள்ள பெரம்பூர் பின்னணியில், தெலுங்கு பையனுக்கும் ஆங்கிலோ, இந்தியப் பெண்ணுக்கும் இடையிலான கலாச்சார வேறுபாடுகளை கடந்த காதல் கதையாக உருவாகிறது.

'பெரம்பூரில் உள்ள 'ஐசிஎப்' எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் முதன் முதலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது' என்கிறார் இயக்குனர் பாரி இளவழகன். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

வடசென்னை என்றாலே கொண்டாட்டங்கள் மிகுந்திருக்கும். நான் 15 வருஷமாக பெரம்பூரில் வசிக்கிறேன். சென்னையின் முக்கியமான ஒரு பகுதி. பெரம்பூரில்தான் ரயில்வேயின் ஐ.சி.எப் இருக்கு. 3 ரயில்வே ஸ்டேஷன்கள் இருக்கிறது. அதைத் தாண்டி பெரம்பூரின் கலாசாரம் பரந்து விரிந்ததாக இருக்கும். ஆங்கிலேயர்கள் இருந்த போதிலிருந்து ஆங்கிலோ இந்தியர்கள் இங்கே வாழ்கிறார்கள் . இங்கே தெலுங்கு மக்களும், இந்தி பேசும் மக்களும் நிறைய உண்டு.

இந்தச் சூழல் என்னைக் கவர்ந்ததால இந்தக் கதையை முழுக்க முழுக்க பெரம்பூரை மையப்படுத்தி எழுதினேன் அங்கேயே படப்பிடிப்பையும் நடத்தினேன். ரயில்வே தொழிற்சாலையான ஐ.சி.எப்-பில் இதுவரை எந்தப் படப்பிடிப்பும் நடந்ததில்லை. முதல்முறையாக அங்கேயும் படப்பிடிப்பை நடத்தியிருக்கோம்.

ஒரு தெலுங்குப் பையன், ஆங்கிலோ இந்தியன் பொண்ணைக் காதலிக்கிறான். இவர்களின் காதல் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன, காதல் கைகூடியதா, கல்யாணத்தில் முடிந்ததா, என்பதுதான் படத்தின் கதை. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !