உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸை இயக்கும் ‛துரந்தர்' இயக்குனர்

பிரபாஸை இயக்கும் ‛துரந்தர்' இயக்குனர்

ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கியவர் ஆதித்யா தர். இந்த இரண்டு பாகங்களும் உலக அளவில் 3000 கோடி வசூலித்தது. இதன் மூலம் பெரிய அளவில் கவனம் பெற்று இருக்கிறார் இயக்குனர் ஆதித்யா.

இந்நிலையில் தற்போது தனது அடுத்த படத்திற்கான திட்டமிடலில் ஈடுபட்டிருக்கும் அவர், சமீபத்தில் பிரபாஸை சந்தித்து ஒரு பான் இந்தியா படம் இயக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு தான் அளித்த ஒரு பேட்டியில் பிரபாஸ் நடிப்பில் படம் இயக்குவதில் தான் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் ஆதித்யா.

ஸ்பிரிட், பவுசி, கல்கி 2 போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் பிரபாஸ். அடுத்த ஆண்டில் சலார் 2 படத்தில் நடிக்க போகிறார். அதனால் இந்த படங்களுக்கு பிறகு ஆதித்யா தர் இயக்கத்தில் அவர் நடிப்பார் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !