உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமந்தா படத்தின் ஹிந்தி பதிப்பை கைப்பற்றிய முன்னணி ஓடிடி தளம்

சமந்தா படத்தின் ஹிந்தி பதிப்பை கைப்பற்றிய முன்னணி ஓடிடி தளம்

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான மா இண்டி பங்காரம் படம் கடந்த ஜூன் 19ல் திரைக்கு வந்தது. தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளியாகிறது. இப்படம் தெலுங்கு திரையுலகில் 100 கோடி வசூல் சாதனையை எட்டிய முதல் பெண் மைய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. தற்போது கர்ப்பமாக இருக்கும் சமந்தா ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தென்னிந்திய மொழிகளில் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஜூலை 17-ல் மா இண்டி பங்காரம் படம் வெளியானதைத் தொடர்ந்து, தற்போது ஹிந்தி பதிப்பில் வெளியாகத் தயாராகி வருகிறது. மா இண்டி பங்காரம் படத்தின் ஹிந்தி பதிப்பு சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இதன் ஒளிபரப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும். சமந்தா இப்படத்தின் தயாரிப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். குல்ஷன் தேவ்வையா, மஞ்சுஷா, ஸ்ரீமுகி, கவுதமி, ஆனந்த், லக்ஷ்மி மற்றும் பலர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !