உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துல்கர் சல்மானின் ஐ ஆம் கேம் தள்ளிப்போகிறதா?

துல்கர் சல்மானின் ஐ ஆம் கேம் தள்ளிப்போகிறதா?

மலையாளத்தில் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள புதிய படம் ஐ ஆம் கேம். இப்படம் அவரது 40-வது படமாகும். இதை ஆகஸ்ட் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், இறுதிக்கட்ட பணிகள் தாமதமாவதால், படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவிடமிருந்து இன்னும் வெளியாகவில்லை.

ஒருவேளை இப்படம் தள்ளிப்போனால், பிருத்விராஜ் சுகுமாரனின் கலிபா படம் அன்றைய நாளில் தனித்து வெளியாகும் வாய்ப்பைப் பெறும். மேலும், மமிதா பைஜுவின் பெத்லஹேம் குடும்ப யூனிட் படத்திற்கான போட்டியும் குறையும். ஐ ஆம் கேம் படத்தில் துல்கர் சல்மானுடன் கயாடு லோஹர், ஆண்டனி வர்க்கீஸ், மிஷ்கின், கதிர், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கிலும் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !